சவுக்கு விரைவாக வளரும் இயல்புடைய
பசுமை மாறா அழகிய தோற்றத்துடன் கூடிய
ஊசியிலைகளைக் கொண்ட
மரமாகும். இம்மரம் நீளமாகவும்,
உருண்டை வடிவத்திலும் வளரும்
இயல்புடையவை. அரிதாக சில வேளைகளில்
கிளைவிடும் இயல்புடையது. இயல்பாக
அடாந்து வளரும் இம்மரத்தின் கீழ் புல்
பூண்டுகள் சிறு குத்துச்செடிகள்
மட்டுமே வளரும்.
இம்மரம் அதிக அளவாக 40 மீ
உயரமும், 50 மீ சுற்றளவும் (180
செ.மீ) கொண்டதாக
வளரும். குறைந்த காலம் மட்டும் வாழும்
இம்மரத்தின் ஆயுட்காலம் 50
ஆண்டு காலமாகும். நல்ல சூழல்
இல்லாத இடங்களில் கூட 25 ஆண்டுகள்
வளரும். இம்மரம்
ஆண்டுக்கு இருமுறை பிப்ரவரி - ஏப்ரல்,
செப்டம்பர் அக்டோபர் மாதங்களில்
பூக்கும். இதன் காய்கள் ஜீன் மற்றும்
டிசம்பரில் காணப்படும். இட அமைப்பைப்
பொறுத்து பூக்கும் மற்றும்
கனி உருவாகும் காலம் மாறுபட
வாய்ப்புண்டு.
சனி, 8 பிப்ரவரி, 2014
சவுக்கு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக