'ஆம்பல்' என தமிழ்
இலக்கியங்கள் அழைக்கும் 'அல்லி'
மலரை ஆங்கில இலக்கியங்கள் லில்லி(lily) என
அழைக்கின்றன. தமிழர்களில் கிறீஸ்தவர்கள்
தங்கள் பெண் பிள்ளைகளுக்கு 'லில்லி'
எனப் பெயர் சூட்டுவதைக்
கவனித்திருக்கிறீர்களா? இவ்வாறு தமிழர்
சமுதாயத்தில் 'அல்லி மலர்' வாழ்கின்றது.
அதற்காக தாமரை எனும் பெயர்
எமது தமிழ்ச் சமுதாயத்தில், பெயர்
சூட்டலில் முக்கிய இடத்தைப்
பிடிக்கவில்லை என்று நான்
சொல்லவில்லை. இலங்கையில் வாழும்
எனது சித்தி ஒருவரின் பெயர்
'தாமரை வதனி' அதே போல்
எனது மைத்துனி ஒருத்தியின் பெயர்
'தாமரைச் செல்வி' அது மட்டுமல்லாமல்
தாமரையின் இன்னொரு பெயர்
'அம்புஜம்' எனக் குறிப்பிட்டேன் அல்லவா?
தமிழ் நாட்டில் பிராமணக் குடும்பங்களில்
'அம்புஜம் மாமிகள்' ஆயிரக் கணக்கில்
இருப்பர் என்பது எனது நம்பிக்கை.
இறுதியாக ஒரு பொது அறிவுத்
தகவல்: எமது அண்டை நாடாகிய
இந்தியாவின் தேசிய மலர் தாமரை என்றால்,
இலங்கைத் திருநாட்டின் தேசிய மலர் 'ஆம்பல்'
எனப்படும் 'அல்லி' மலர்தான்(சிவப்பு மற்றும்
நீலம் கலந்த குளத்து அல்லி)
(இன்னும் சொல்வேன்)
சனி, 8 பிப்ரவரி, 2014
அல்லி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக