இங்கிலாந்து நாட்டு மனோதத்துவம் மற்றும்
நரம்பியல் வல்லுநர் பிரைட்லைட் இவர்,
காந்தவியல் மின்புலம்மூலம்
ஆராய்ச்சி நடத்தி, பேய்,
பிசாசு இல்லை என்று உறுதி செய்துவிட்டு,
அதை மக்களுக்கு உணர வைப்பதற்காக பேய்,
பிசாசு இருப்பதாகக் கூறப்படும்
தற்போது புழக்கத்தில் இல்லாத 800 வருட
பழங்காலக் கட்டடம் ஒன்றில்
பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு,
ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதில் பேய்
மற்றும் பிசாசு பிடித்தவர்கள், தங்களுக்குப்
பேய் பிடித்தபோது திடீர் சத்தம் கேட்டதாகவும்,
இன்னும் ஒரு சிலர் குழந்தை அழுவதுபோல சத்தம்
கேட்ட தாகவும், வேறு சிலர் திடீரெனத்
தன்னை யாரோ தொட்டுவிட்டு மறைந்துவிட்டது என்றும்
கூறினார்கள்.
பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும்
இடத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறான
காந்த புலம் வெளிப்பட்டிருக்கலாம்.
மூளையில் சில நரம்புகள்
பாதிக்கப்பட்டவர்கள் இந்த இடங்களுக்குச்
செல்லும்போது அல்லது அதிகமாக
உணர்ச்சி வசப்படுகிறவர்கள் அந்த
இடத்திற்குச்
செல்லும்போது வழக்கத்திற்கு மாறான
காந்தபுலம் மேற்கூறிய
பிரமைகளை ஏற்படுத்தி இருக்கலாம். எனவே,
பேயோ, பிசாசோ அதைச்
செய்யவில்லை என்று கூறியதோடு நின்றுவிடாமல்
விஞ்ஞானக் கருவிகளுடன்
அவர்களுக்கு அதை நிரூபித்தும்
காண்பித்தார்.
கொள்ளிவாயுப் பேய்
சதுப்பு நிறைந்த வயல் நிலங்களில் நடக்கும்
ஒருவரை இது நெருப்பாகப்
பின்தொடரும் எனவும் ஓட
முற்பட்டால் இதுவும் ஓடும் எனவும்
கூறப்படுகிறது. அறிவியல் ரீதியில்
அணுகுபவர்கள் இதைச் சதுப்பு நிலத்தின் கீழ்
அழுகும் தாவரப் பாகங்களிலிருந்து
உயிரிவாயு எனப்படும் மெதேன்
வாயு கசிவதாகவும் சதுப்பில் புதையும்
கால் வெளியில் எடுக்கப்படும்
போது வாயு வெளியேறி காற்றில்
தீப்பற்றிக் கொள்ளுவதாகவும்
விளக்குவர். மெதேன் வாயுவுக்கு தமிழ்
நாட்டில் கொள்ளிவாயு என்ற
பெயர் வழங்கப்படுகிறது.
சனி, 8 பிப்ரவரி, 2014
பேய் இருக்கா ? இல்லையா ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக