சனி, 8 பிப்ரவரி, 2014

பேய் இருக்கா ? இல்லையா ?

இங்கிலாந்து நாட்டு மனோதத்துவம் மற்றும்
நரம்பியல் வல்லுநர் பிரைட்லைட் இவர்,
காந்தவியல் மின்புலம்மூலம்
ஆராய்ச்சி நடத்தி, பேய்,
பிசாசு இல்லை என்று உறுதி செய்துவிட்டு,
அதை மக்களுக்கு உணர வைப்பதற்காக பேய்,
பிசாசு இருப்பதாகக் கூறப்படும்
தற்போது புழக்கத்தில் இல்லாத 800 வருட
பழங்காலக் கட்டடம் ஒன்றில்
பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு,
ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதில் பேய்
மற்றும் பிசாசு பிடித்தவர்கள், தங்களுக்குப்
பேய் பிடித்தபோது திடீர் சத்தம் கேட்டதாகவும்,
இன்னும் ஒரு சிலர் குழந்தை அழுவதுபோல சத்தம்
கேட்ட தாகவும், வேறு சிலர் திடீரெனத்
தன்னை யாரோ தொட்டுவிட்டு மறைந்துவிட்டது என்றும்
கூறினார்கள்.
பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும்
இடத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறான
காந்த புலம் வெளிப்பட்டிருக்கலாம்.
மூளையில் சில நரம்புகள்
பாதிக்கப்பட்டவர்கள் இந்த இடங்களுக்குச்
செல்லும்போது அல்லது அதிகமாக
உணர்ச்சி வசப்படுகிறவர்கள் அந்த
இடத்திற்குச்
செல்லும்போது வழக்கத்திற்கு மாறான
காந்தபுலம் மேற்கூறிய
பிரமைகளை ஏற்படுத்தி இருக்கலாம். எனவே,
பேயோ, பிசாசோ அதைச்
செய்யவில்லை என்று கூறியதோடு நின்றுவிடாமல்
விஞ்ஞானக் கருவிகளுடன்
அவர்களுக்கு அதை நிரூபித்தும்
காண்பித்தார்.
கொள்ளிவாயுப் பேய்
சதுப்பு நிறைந்த வயல் நிலங்களில் நடக்கும்
ஒருவரை இது நெருப்பாகப்
பின்தொடரும் எனவும் ஓட
முற்பட்டால் இதுவும் ஓடும் எனவும்
கூறப்படுகிறது. அறிவியல் ரீதியில்
அணுகுபவர்கள் இதைச் சதுப்பு நிலத்தின் கீழ்
அழுகும் தாவரப் பாகங்களிலிருந்து
உயிரிவாயு எனப்படும் மெதேன்
வாயு கசிவதாகவும் சதுப்பில் புதையும்
கால் வெளியில் எடுக்கப்படும்
போது வாயு வெளியேறி காற்றில்
தீப்பற்றிக் கொள்ளுவதாகவும்
விளக்குவர். மெதேன் வாயுவுக்கு தமிழ்
நாட்டில் கொள்ளிவாயு என்ற
பெயர் வழங்கப்படுகிறது.

மனித மூளை

மூதறிஞர்கள் (Ancient Philosophers) பலரும்
மனிதனின் நடவடிக்கை இதயத்தால் தான்
கட்டுப்படுத்தப்படுகிறது என்று நம்பினார்கள்.
மூளையில் இருக்கும் ஒரு நரம்பு செல்
ஒரு நொடியில் ஒரு லட்சம்
சமிங்சைகளை அறிந்து கொள்ளும்.
குறித்த நிறத்தை அறிந்துகொள்ளும்
சக்தி பெண்களுக்கு அதிகம்

அதிகபட்சமாக 2 மணி நேரமே ஒரு இரவில்
கனவு காண முடியும்.

மூன்றுவார கருவிலிருந்தே இதயம் இயங்க
ஆரம்பித்து விடும். உங்களது இதயம்
ஒரு ஆண்டில் 30 மில்லியன் தடவைகள்
துடிக்கிறது.
புருவமுடி 10 வாரங்களில் விழுந்து விடுகிறது.
உங்கள் தலையில் உள்ள
ஒரு முடி ஐந்து ஆண்டுகள் விழாமல் இருக்கும்

உணர்வுகளை மூளை தொடு உணர்ச்சி மூலம்
அறியப்படுவதை விட ஒலி மூலம் விரைவில்
அறிந்து கொள்ளும்.
மனிதன் ஏதும் சாப்பிடாமல் ஒருமாதம்
வாழலாம் ஆனால் ஒரு வாரம்
மட்டுமே தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியும்.

நமக்கு சட்டுணு ஞாபகம்
வந்தது என்று சொல்கிறோம் அது 0.0004
நொடிகள்.
கொஞ்சம் இருங்கள் …
ஒரே ஒரு தகவல்.
அதிகமான இயற்கை மரணங்கள் மனிதன்
தூங்கும் நேரமான் அதிகாலை 3 மணியில்
இருந்து 4 மணிக்குள் நிகழ்கிறது.
-நன்றி இனியவைகூறல

பாரிஜாதம்

வெண்மையான இதழ்களைக்
கொண்டதும் ஆரஞ்சு நிற
காம்புகளைக் கொண்டதுமான
மலர் பவளமல்லிகை . தேவலோக மரமான
பாரிஜாதமே பூலோகத்தில்
பவளமல்லிகையாக
வளர்ந்துள்ளது என்கின்றன
புராணங்கள். இரவில்
மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த
பூக்கள் இரவு முழுவதும் சுகந்த
மணத்தை பரப்பும்
தன்மை கொண்டது.

முத்து ?

வாஷிங்டன்: செவ்வாய்
கிரகத்தை ஆராய்ச்சி செய்து வரும்
நாசா விஞ்ஞானிகள், அங்கு முத்து போன்ற
வெள்ளை நிறத்தில் பூ போல
ஒரு பொருள்
இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்க
விண்வெளி ஆய்வு நிறுவனமான
நாசா,
செவ்வாய்
கிரகத்தை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது.
விஞ்ஞானிகள் அனுப்பிய
கியூரியாசிட்டி ஆய்வு கலம், செவ்வாயில்
தரையிறங்கி அங்குள்ள நில அமைப்புகளை படம்
பிடித்து அனுப்பி வருகிறது. அங்கு தண்ணீர்
உள்ளதா, மனிதன் வாழ
முடியுமா என்பதை கண்டுபிடிப்பதே நாசாவின்
நோக்கமாக உள்ளது. இந்நிலையில், கடந்த
மாதம் கியூரியாசிட்டி அனுப்பிய
புகைப்படங்களை நாசா விஞ்ஞானிகள்
ஆய்வு செய்த போது ஆச்சரியம் அடைந்தனர்.
முத்து போன்ற வெள்ளை நிறத்தில்
இதழ்களுடன் பூ போன்ற ஒரு பொருள்
செவ்வாய் கிரகத்தில் இருக்கும்
படத்தை கியூரியாசிட்டி அனுப்பி உள்ளது.
அதை பார்த்து விஞ்ஞானிகள் ஆச்சரியம்
அடைந்தனர்.
ஒரு பூவாக இல்லாமல்
கொத்தாக இருக்கிறது.
அதற்கு மார்ஷியன் பிளவர்
என்று பெயரிட்டுள்ளனர். மலை பாறையில்
துளிர்விடும் பூங்கொத்து போல்
அது காட்சி அளிக்கிறது. இந்த
படத்தை ஆன்லைனில் பார்த்த பலர்,
அது பளிங்கு கல்லாக இருக்கலாம், படிக
கல்லாக இருக்கலாம் என்று பல
கருத்துகளை கூறி வருகின்றனர். புதிதாக பூத்த
பூதான்
அது என்று அடித்து சொல்லியிருக்கிறார்
ஒருவர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நாசா செய்தித்
தொடர்பாளர் கைவெப்ஸ்டர்
கூறுகையில், இதே போன்ற ஒரு பொருள்
செவ்வாய் கிரகத்தில் இருப்பதை, கடந்த
ஆண்டு அக்டோபர் மாதம்
கியூரியாசிட்டி விண்கலம் படம்
பிடித்து அனுப்பியது. நாசா விஞ்ஞானிகள்
அந்த படத்தை தீவிரமாக ஆய்வு செய்த
போது, அது பிளாஸ்டிக் துண்டு என்பதையும்,
கியூரியாசிட்டி விண்கலத்தில்
இருந்து செவ்வாய் கிரகத்தில்
விழுந்துள்ளது என்பதையும் கண்டுபிடித்தனர்.
ஆனால், இப்போது வந்துள்ள படத்தில்
இருப்பது மலை பாறையின்
ஒரு பகுதி என்பது உறுதியாகி உள்ளது.
பூ போன்ற வடிவத்தில் இருப்பதால்,
செவ்வாயில்
பூ வளர்கிறது என்று சொல்ல
முடியாது என்றார்.

சவுக்கு

சவுக்கு விரைவாக வளரும் இயல்புடைய
பசுமை மாறா அழகிய தோற்றத்துடன் கூடிய
ஊசியிலைகளைக் கொண்ட
மரமாகும். இம்மரம் நீளமாகவும்,
உருண்டை வடிவத்திலும் வளரும்
இயல்புடையவை. அரிதாக சில வேளைகளில்
கிளைவிடும் இயல்புடையது. இயல்பாக
அடாந்து வளரும் இம்மரத்தின் கீழ் புல்
பூண்டுகள் சிறு குத்துச்செடிகள்
மட்டுமே வளரும்.
இம்மரம் அதிக அளவாக 40 மீ
உயரமும், 50 மீ சுற்றளவும் (180
செ.மீ) கொண்டதாக
வளரும். குறைந்த காலம் மட்டும் வாழும்
இம்மரத்தின் ஆயுட்காலம் 50
ஆண்டு காலமாகும். நல்ல சூழல்
இல்லாத இடங்களில் கூட 25 ஆண்டுகள்
வளரும். இம்மரம்
ஆண்டுக்கு இருமுறை பிப்ரவரி - ஏப்ரல்,
செப்டம்பர் அக்டோபர் மாதங்களில்
பூக்கும். இதன் காய்கள் ஜீன் மற்றும்
டிசம்பரில் காணப்படும். இட அமைப்பைப்
பொறுத்து பூக்கும் மற்றும்
கனி உருவாகும் காலம் மாறுபட
வாய்ப்புண்டு.

அல்லி

'ஆம்பல்' என தமிழ்
இலக்கியங்கள் அழைக்கும் 'அல்லி'
மலரை ஆங்கில இலக்கியங்கள் லில்லி(lily) என
அழைக்கின்றன. தமிழர்களில் கிறீஸ்தவர்கள்
தங்கள் பெண் பிள்ளைகளுக்கு 'லில்லி'
எனப் பெயர் சூட்டுவதைக்
கவனித்திருக்கிறீர்களா? இவ்வாறு தமிழர்
சமுதாயத்தில் 'அல்லி மலர்' வாழ்கின்றது.
அதற்காக தாமரை எனும் பெயர்
எமது தமிழ்ச் சமுதாயத்தில், பெயர்
சூட்டலில் முக்கிய இடத்தைப்
பிடிக்கவில்லை என்று நான்
சொல்லவில்லை. இலங்கையில் வாழும்
எனது சித்தி ஒருவரின் பெயர்
'தாமரை வதனி' அதே போல்
எனது மைத்துனி ஒருத்தியின் பெயர்
'தாமரைச் செல்வி' அது மட்டுமல்லாமல்
தாமரையின் இன்னொரு பெயர்
'அம்புஜம்' எனக் குறிப்பிட்டேன் அல்லவா?
தமிழ் நாட்டில் பிராமணக் குடும்பங்களில்
'அம்புஜம் மாமிகள்' ஆயிரக் கணக்கில்
இருப்பர் என்பது எனது நம்பிக்கை.
இறுதியாக ஒரு பொது அறிவுத்
தகவல்: எமது அண்டை நாடாகிய
இந்தியாவின் தேசிய மலர் தாமரை என்றால்,
இலங்கைத் திருநாட்டின் தேசிய மலர் 'ஆம்பல்'
எனப்படும் 'அல்லி' மலர்தான்(சிவப்பு மற்றும்
நீலம் கலந்த குளத்து அல்லி)
(இன்னும் சொல்வேன்)